தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

X
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 13-ஆம் தேதி தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் 20,000 மதிப்புள்ள அவரது பைக்கை நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். நேற்று (ஏப்.17) மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு குறித்து தேனி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story

