சிறுமி பலாத்காரம் - வாலிபர் மைசூரில் கைது
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயது மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த சிறுமியிடம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த முருகன் என்ற அரவிந்த் (26) என்ற வாலிபர் பழகி, திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்து, அவர்கள் அரவிந்திடம் சந்தித்து கேட்டபோது அவர் சிறுமியின் தாயை மிரட்டி உள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் மைசூரில் தலைமறைவாக இருந்த அரவிந்தை போலீசார் கைது செய்து, நேற்று நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அரவிந்த் மீது வெள்ளிசந்தை மற்றும் இரணியல் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story



