தபேலா கலைஞர் தூக்கிட்டு  தற்கொலை

தபேலா கலைஞர் தூக்கிட்டு  தற்கொலை
X
அருமனை
குமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (38) இவர் ஒரு தபேலா இசைக்கலைஞர். சிபிராஜுக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.       கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிராஜ் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். இதை அடுத்து நேற்று கணவன் மனைவியிடம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிபிராஜ் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.        இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மீட்டு குழுத்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிபிராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.       இந்த சம்பவம் குறித்து சிபிராஜ் தாயார் லில்லிபாய் அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story