தஞ்சாவூர், இராமநாதபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள், மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் - ஆட்சியர்

X
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம் மற்றும் சரகம், இராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் எதிர்வரும் 23.04.2025 புதன்கிழமை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் ( https://thanjavur.nic.in/ ) 20.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 22.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை விண்ணப்பித்திடலாம். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்திசெய்து, விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் பேரில், உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச்சான்றின் அடிப்படையில், பரிசீலனை செய்து தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும். மேற்படி அனுமதி சீட்டினை இணையவழியாக பதிவிறக்கம் செய்துகொண்டு, அனுமதி சீட்டினை காண்பித்து இராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரரர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

