பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வளாகத்தில் மர கன்றுகள் நடு விழா

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வளாகத்தில் மர கன்றுகள் நடு விழா தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுலின் ஆலோசனைப்படியும் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரிய அளவிலான மர கன்றுகள் நடு விழா நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியும்மாகிய A.பல்கீஸ் தலைமை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்/சார்பு நீதிபதியும்மாகிய P.மகேந்திர வர்மா குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 1.பிரேம் குமார், குன்னம் வட்டசட்ட பணிகள் குழுவின் தலைவரும், குற்றவியல் நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதியும்மாகிய திருமதிகவிதா, மற்றும் வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், குற்றவியல் நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதியும்மாகிய திரு.செ.பிடர்வத்ராஜ் ஆறுமுகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 2. செல்வி.கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி.தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ், கூடுதல் மாவட்ட மகிளா நீதிபதி செல்வி.ரேஷ்மா அவர்களுடன் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரியை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் நீதிபதிகளும் கலந்துகொண்டு 250 மரக்கன்றுகள் நட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்/சார்பு நீதிபதியும்மாகிய மகேந்திர வர்மா உடன் பெரம்பலூர் மாவட்ட திட்ட அலுவலர் தேவுநாதன் மற்றும் கலைவானி, கோட்ட பொறியாளர் (H) கட்டுமான மற்றும் பராமரிப்பு, மாவட்ட வனத்துறையை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடுவதற்கு உதவி புரிந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Next Story

