பொம்மனப்பாடி கிராம சட்ட விழிப்புணர்வு முகாம்
மனிதனின் இன்றியமையாத ஒன்று சுற்றுப்புறழல் ஆகும். வேப்பமரத்தின் இலை, காய், கனி நமக்கு பயனளிக்கும் மற்றும் புங்கை மரம் நடுவதால் நமக்கு நிழல், நல்ல இயற்கையான காற்றை தருகிறது மற்றும் பூவரசன் மரம், ஆலமரம், அரச மரம் மேலும் பல்வேறு மரங்களின் பயன்கள் குறித்தும் மரங்களை வளர்ப்பதால் சுற்றப்புறுசூழல் தூய்மையாக
தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆலோசனைப்படியும் இன்று 18.04.2025 ம் தேதி வெள்ளி கிழமை காலை 09.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி கிராம பஞ்சயத்து அலுவலகத்தில் பெரிய அளவிலான மர கன்றுகள் நடு விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியும்மாகிய A.பல்கீஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்து பேசுகையில் மனிதனின் இன்றியமையாத ஒன்று சுற்றுப்புறழல் ஆகும். வேப்பமரத்தின் இலை, காய், கனி நமக்கு பயனளிக்கும் மற்றும் புங்கை மரம் நடுவதால் நமக்கு நிழல், நல்ல இயற்கையான காற்றை தருகிறது மற்றும் பூவரசன் மரம், ஆலமரம், அரச மரம் மேலும் பல்வேறு மரங்களின் பயன்கள் குறித்தும் மரங்களை வளர்ப்பதால் சுற்றப்புறுசூழல் தூய்மையாகவும், பசுமையாகவும் இருந்தால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றம், பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் நடவேண்டும் எனவும் பேசினார். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா பேசுகையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பயன்கள் குறித்தும், வழக்கு நடத்த போதிய வசதி இல்லாத பொதுமக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால் உடனடியாக தீர்வு கிடைக்கும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் திட்ட அலுவலர் தேவநாதன் மற்றும் கலைவானி, கோட்ட பொறியாளர் (H) கட்டுமான மற்றும் பராமரிப்பு, சுதாகர், மாவட்ட வனஅலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைமை பாதுகாப்பு வழக்கறிஞர்.சீராஜீதீன், துணை பாதுகாப்பு வழக்கறிஞர் திருநாவுக்கரசு, உதவி வழக்கறிஞர் திரு.தினேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் சட்டங்கள் குறித்தும், பெண்களுக்கான சட்டங்கள் குறித்தும் பேசினார்கள். பெரம்பலூர் பார் அசோசியசன் வழக்கறிஞர் திரு.பேரா முருகையன், அட்வகேட் அசோசியசன் சங்கத் தலைவர் சிவசங்கரன், வேப்புந்தட்டை பார் அசோசியசன் சங்க தலைவர் தமிழரசன் அவர்களும் மரக்கன்றுகளை நடுவது குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் பெரம்பலூர் மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி இந்திராணி , குடும்புநல மாவட்ட நீதிபதி தனசேகரன் சார்பு நீதிபதி அண்ணாமலை, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 1. பிரேம் குமார், குன்னம் வட்டசட்ட பணிகள் குழுவின் தலைவரும், உற்றவியல் நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதியும்மாகிய மதிகவிதா, மற்றும் வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், குற்றவியல் நீதிபறி மற்றும் உரிமையியல் நீதிபதியும்மாகிய செ.பிடர்வத்ராஜ் ஆறுமுகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 2. செல்வி.கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்விதன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ், கூடுதல் மாவட்ட மகிளா நீதிபதி செல்வி.ரேஷ்மா பெரம்பலூர் பார் அசோசியசன் செயலாளர் சேகர், பார் அசோசியசன் பொருளாளர் சிவசங்கரன், உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். முகாமிற்கு வருகைபுரிந்த அனைவரையும் தலைமை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் வரவேற்று பேசினார். இறுதியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்/சார்பு நீதிபதியும்மாகிய P.மகேந்திர வர்மா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் நான்கு மனுக்கள் பெறப்பட்டன. பொம்மனப்பாடி பஞ்சாயத்து தலைவர் குழந்தைவேல் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
Next Story




