நண்பனை எதற்காக கொன்றேன்.? திடுக்கிடும் தகவல்கள்.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (29) என்பவர் நேற்று முன்தினம் (ஏப்.17) மாலை நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர் சரத்குமார் கைது செய்யப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறுகையில், '' மது அருந்திய நண்பர்கள் சென்ற பின்பும், நானும் கோவிந்தராஜூம் தொடர்ந்து மது அருந்தினோம். அப்போது கோவிந்தராஜ் மது அருந்தக்கூடாது என அறிவுரை கூறினார். நீயே குடிபோதையில் தான் உள்ளாய். நீ எனக்கு அறிவுரை கூறுகிறாயா? எனக் கூறி வாக்குவாதம் செய்தேன். அப்போது வாக்குவாதம் முற்றியதால் பாட்டிலால் தலையில் அடித்ததில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார்'' என கூறியுள்ளார். போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

