சேலத்தில் பெண்ணின் சேலையை இழுத்த தொழிலாளி கைது

சேலத்தில் பெண்ணின் சேலையை இழுத்த தொழிலாளி கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் தளவாய்பட்டி அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 46). இவர் ஆண்டிப்பட்டி பகுதியில் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மர்ம ஆசாமி ஒருவர் மாதேசிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் மாதேசை தாக்கினார். அப்போது மாதேசின் அக்காள் சுமதி, அங்கு வந்து தம்பியை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார். அவரையும் தாக்கி சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தி உள்ளார். இது குறித்து மாதேஸ் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தளவாய்பட்டி சின்னமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தொழிலாளி தர்மராஜ் (33) பணம் கேட்டு மிரட்டியதும், பெண்ணை தாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story