திருக்கோவிலுாரில் மரக்கன்று நடு விழா

X
திருக்கோவிலுார், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாட்டில் நெடுஞ்சாலை, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் முகாம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்தது. தொடர்ந்து பயணியர் தங்கும் விடுதி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நீதிபதி வெங்கடேஷ் குமார், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரசாந்த் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அனிதா, பொறியாளர் எழிலரசன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார், வழக்கறிஞர்கள் செல்வராஜ், ராகவன், கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

