விபத்தில் மரணம் அடைந்த விசிக நிர்வாகியின் மகன் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் முத்தமிழ்செல்வன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த விடுதலை கட்சியின் நிர்வாகிகள்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் கிளைச் செயலாளர் முத்தமிழ்செல்வன் மகன் முகேஷ் என்பவர் விபத்தில் மரணம் அடைந்தார். தகவல் அறிந்த பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அழகேசன் மற்றும் ஒன்றிய அமைப்பாளர் மேல மாத்தூர் ஜெயபால் மற்றும் மேலமாத்தூர் வேல்முருகன், ராஜா வேல்முருகன் ராஜா மற்றும் கீழமாத்தூர் கிளை நிர்வாகிகள் பாலமுருகன் அழகர் ஆகியோர் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மகனின் இறந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
Next Story