வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X
மதுரை மேலூர் அருகே நிரந்தர வேலை கிடைக்காமல் மன விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகன் திருமாலை (22) என்பவர் காஞ்சிராம்பேட்டையில் உள்ள டீக்கடையில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இவருக்கு நிரந்தர வேலை கிடைக்காமல் மன விரக்தியில் கடந்த சில நாட்களாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.18) மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story