கோடைகால பயிற்சி முகாம் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

கோடைகால பயிற்சி முகாம் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்
X
கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளதால் ஆர்வமுள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளதால் ஆர்வமுள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, 2025 ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை 21 நாட்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் நடைபெறஉள்ளது. இப்பயிற்சியில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, குத்துசண்டை, கைப்பந்து, கையுந்துப்பந்து, தேக்வாண்டோ மற்றும் கால்பந்து போன்ற மாவட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள விளையாட்டுகளுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் போட்டிகள் குறித்தும், விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளும், பயிற்றுநர்களால் முறையான பயிற்சியும், ஊட்டசத்தான சிற்றுண்ணவும் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே இப்பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 18 வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லுரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை 19.04.2025 முதல் அலுவலக வேலை நேரங்களில் காலை 10.00 முதல் 5.00 மணி வரை நேரடியாவோ அல்லது (அல்லது) தொலைபேசி வாயிலாகவே பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பெயர்களை பதிவு செய்திட மற்றும் கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற அலைபேசி எண் வாயிலாகவும், மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்ணான 04328-299266 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் .
Next Story