புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில்

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா, இலக்கிய மன்ற ஆண்டு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். விழாவில், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.
Next Story

