மறவா பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.
மறவா பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு. கோவை மாவட்டம், கணபதி பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஸ்ரீ ஹரிராம் வயது 19. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவுக்காக, அவரது நண்பர் தீபக் என்பவர் வீட்டுக்கு சென்றார். பிறகு நண்பர்களுடன் மறவாபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஸ்ரீஹரி ராம் குளிக்க சென்றார். குளிக்கும்போது காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடன் வந்த அவரது நண்பர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் காவிரி ஆற்றில் இறங்கி ஸ்ரீ ஹரி ராம் உடலை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர். சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் உயிரிழந்த ஸ்ரீ ஹரிராம் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
Next Story






