தீத்திப்பாளையம் அருகே அனுமதியின்றி மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் !

தீத்திப்பாளையம் அருகே அனுமதியின்றி மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் !
X
கோவை அருகே உள்ள தீத்திப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பட்டா நிலத்தில் உரிய அனுமதியின்றி சிலர் மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை அருகே உள்ள தீத்திப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பட்டா நிலத்தில் உரிய அனுமதியின்றி சிலர் மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கொங்கு பெரியசாமி தலைமையிலான விவசாயிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு முறையான அனுமதியின்றி, மேற்படி புறம்போக்கு நிலங்களில் கனரக இயந்திரங்கள் மூலம் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உரிய அனுமதியின்றி மண் எடுப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story