அணையில் மூழ்கி கேரளா வாலிபர் உயிரிழப்பு

X
குமரி மாவட்டம் மலை பகுதியில் சிற்றார் 1, 2 அணைகள் உள்ளது. நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி திருவனந்தபுரத்தில் செயல்படும் கார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆறு பேர் கொண்ட கும்பல் சுற்றுலாவுக்கு நேற்று சிற்றாறு பகுதிக்கு வந்துள்ளனர். அணையின் கரையோரத்தில் உணவு சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி உள்ளனர். தொடர்ந்து போதையில் ஆழம் தெரியாமல் அணையின் ஆபத்தான பகுதியில் இறங்கியுள்ளனர். அப்போது ஒரு வாலிபர் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த மற்ற வாலிபர்கள் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இது குறித்த தகவல் பேரில் குலசேகரம் தீயணைப்பு துறையினர், மற்றும் பொது மக்களும் இணைந்து 3 மணி நேர தேடுதலுக்குப் பின் மூழ்கிய வாலிபரை மீட்டனர். போலீசார் விசாரணை தண்ணீரில் மூழ்கி இறந்தவர் பெயர் அபினாஷ் தந்து பவன் (27) என்பது தெரிய வந்தது. மீட்கப்பட்ட அபினாஷை குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆறுகாணி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

