முன்னூர் அருகே டூவீலர் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
முன்னூர் அருகே டூவீலர் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா முன்னூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சடையராஜ் வயது 52. இவர் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7 மணி அளவில், க.பரமத்தி- நொய்யல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் முன்னூர் பகுதியில் செயல்படும் தனியார் மளிகை கடை அருகே சென்றபோது, எதிர் திசையில், நீலகிரி மாவட்டம், ஊட்டி,கெல்க்கின் குமார் நகர் பகுதியைச் சேர்ந்த அருள் தாஸ் பிரசாத் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சடையராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சடையராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சடையராஜ் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அருள் தாஸ் பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story




