கோவை:அறிவியல் மையத்தில் நிழல் இல்லா நாள் -மாணவர்கள் வியப்பு

X
கோவை-அவினாசி சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் நேற்று நிழல் இல்லா நாள் நிகழ்வு நடைபெற்றது. நண்பகல் 12.21 மணியளவில் சூரியன் உச்சியில் இருந்ததால், பொருட்களின் நிழல் அவற்றின் பரப்புக்குள்ளேயே விழுந்தது. இந்த அரிய நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். மண்டல அறிவியல் மையத்தின் வழிகாட்டி ஆசிரியர் லெலின் பாரதி கூறுகையில், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் சரியாக கிழக்கே உதித்து மேற்கே மறையும். நேற்று கோவை மற்றும் அதற்கு முன்தினம் பொள்ளாச்சியில் நிழல் இல்லா நாள் நிகழ்ந்தது. இதனை முதன்முறையாக பார்த்த மாணவர்கள் வியப்படைந்ததாக அவர் தெரிவித்தார். வட்டமாக நிற்கவைத்து நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் அளித்ததன் மூலம் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story

