ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை
X
ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள தேவத்தூா், கொத்தையம், போடுவாா்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Next Story