காஞ்சிபுரத்தில் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா

ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில், சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான திருத்தேர் உற்சவம் வெகு விமரிசை
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும்,பரமபத வாசல் கொண்ட திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும் உற்சவ பெருமாள் பல்வேறு அலங்காரத்தில்,காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான இன்று காலை அஷ்டபுஜ பெருமாள் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,மஞ்சள் நிற பட்டுடுத்தி திருஆபரணங்கள் அணிந்து "ராஜ அலங்காரத்தில்" திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர் தீபாராதனைகள் காட்டப்பட்டு,அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா"என பக்தி பரவச கரகோஷங்களுடன் திருத் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்ல,கோவிலில் இருந்து புறப்பட்டு ரங்கசாமி குளம், டி.கே.நம்பி தெரு, செட்டி தெரு, வரதராஜப்பெருமாள் கோவில் மாடவீதி வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தப்படி பெருமாள் திரு வீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். ராஜ அலங்காரத்தில் திருத்தேரில் பவனி வந்த அஷ்டபுஜ பெருமாளை வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் கற்பூர தீபாராதனைகளை சமர்பித்து மன்முருகி வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த சித்திரை மாத பிரம்மோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் SKPS.சந்தோஷ்குமார் மற்றும் விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்துள்ளனர்.
Next Story