காந்திகிராமம் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.

காந்திகிராமம் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.
காந்திகிராமம் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம். கரூர் வடக்கு காந்திகிராமம், பாரதியார் நகர், 5வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கண்ணன் வயது 38. இவர் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 8 மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள பழைய ஆயுதப்படை மைதானம் அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணனுக்கு பலத்த காயமேற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவமறிந்த கண்ணனின் தந்தை ராஜேந்திரன் வயது 70 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story