கலைஞரின் கனவு இல்லம் திட்டம் வீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் வீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
X
"கலைஞரின் கனவு இல்லம் திட்டம் வீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.அந்த வகையில், ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்த போது, அவர்களிடம் மனுக்களை பெற்ற கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியுள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் இல்லம் தேடி வரும் என்றார்.
Next Story