திருவாடுதுறை ஆதீனம் திண்டுக்கல் பாடசாலை திறப்பு விழாவில் சிறப்புரை

திருவாடுதுறை ஆதீனம் திண்டுக்கல் பாடசாலை திறப்பு விழாவில் சிறப்புரை
X
பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், இந்த காலகட்டத்தில் குழந்தைகளிடம் எடுத்து சொல்ல வேண்டும், அரிவாள் எல்லாம் கொண்டு செல்வது தேவையில்லாதது. மாணவரிடம் அறியாமை, அறிவு வளர்ச்சி அடையவில்லை திருவாடுதுறை ஆதீனம் திண்டுக்கல் பாடசாலை திறப்பு விழாவில் சிறப்புரை
திண்டுக்கல் மெயின் ரோடு கிராம முன்சீப் சந்தில் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் தேவார பாடசாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருவாடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் அம்பலவான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பாடசாலை திறந்து வைத்து ஆற்றிய சிறப்புரையில், பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், இந்த காலகட்டத்தில் குழந்தைகளிடம் எடுத்து சொல்ல வேண்டும், அரிவாள் எல்லாம் கொண்டு செல்வது தேவையில்லாதது. மாணவரிடம் அறியாமை, அறிவு வளர்ச்சி அடையவில்லை. இறைவன் பேரறிவாளன். நாம் சிற்றறிவாளர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தான் அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் தான் ஞானம் என்னும் முக்தி கிடைக்கும். முக்தி கிடைத்தால் இறைவன் திருவடியை அடைய முடியும் என பேசினார். இதில் திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரியார், திருவாடுதுறை தம்பிரான் சாமிகள், இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், பரமேஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பாடசாலையில் திருவாடுதுறை ஆதீனம் சார்பில் சைவ சித்தாந்தம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் தகுந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்பட உள்ளனர். வயது வரம்பு இன்றி, இந்துக்களுக்கு, காலை மாலை என இரண்டு வேளைகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன. முன்னதாக ஸ்ரீ சிவப்பிரகாச விநாயகர், ஸ்ரீ ஞானமா நடராஜர், ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆன்மீகப் பெரியோர்கள் பக்தர்கள் பாடசாலை மாணவர்கள் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story