குமரி : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குமரி : சுற்றுலா  பயணிகளுக்கு அனுமதி
X
கண்ணாடி பாலத்தில்
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும்  கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் ஆய்வு பணி மற்றும் பராமரிப்பு பணி கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்தார். இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் நேற்று முதல் மீண்டும் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் கண்ணாடி கூண்டு பாலத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.
Next Story