திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டம்
X
திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பயணியர் விடுதியில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயல்படாததால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆத்தூர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரும் திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளருமான கள்ளிப்பட்டி மணி அவர்கள் தலைமையிலும் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பட அணி துணை ஒருங்கிணைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பயணியர் விடுதியில் நடைபெற்றது. திமுக தகவல் தொழில்நுட்பட அணி ஒருங்கிணைப்பாளர்கள் மத்தியில் ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி அவர்கள் பேசும் போது இன்று புதிதாக திமுக தகவல் தொழில்நுட்பட அணியில் ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களையும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் அவர்களையும் நீங்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருப்பதால் குறுகிய நாட்கள் இருப்பதாலும் பி.எல்2, பி.எல்.சி வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து நீங்கள் பணியாற்ற வேண்டும் என்பதாலும் உடனடியாக உங்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டி இருப்பதால் உங்களை அழைத்துள்ளேன் என்றார். ஏற்கனவே ஆத்தூர் தொகுதியில் இருந்த திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் சரிவர செயல்படாததால் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதை உணர்ந்து நீங்கள் சிறப்பாக களப்பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தியதோடு கழகத்தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தினந்தோறும் வழங்கும் சாதனை நலத்திட்டங்களையும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும் அண்ணன் அமைச்சர் பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதியில் செய்த நலத்திட்டங்கள் குறித்தும் அவர் வழங்கிய அரசு பணிகள் குறித்தும், நீங்கள் ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக செயல்பட வேண்டும் என வாழ்த்தியதோடு அன்றாடம் திமுகவின் சாதனைகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் உங்கள் பங்கு முக்கியமானது என்றார். நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், தனிஸ்லாஸ், ஆத்தூர் தொகுதி மகளிர் ஐ.டி.விங் பொறுப்பாளர் பிரதீபாகனகராஜ், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார். ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சோனியா, சின்னாளபட்டி பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சித், பிரியங்கா, மற்றும் அகரம், அய்யம்பாளையம் பேரூராட்சி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எலிசபெத்ராணி, கிரிஷ்கேசன், உட்பட ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story