இளைஞரணியினர் கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்

X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களிடம் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். மனுக்களை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வரும் 2026ம் தேர்தல் திமுகவிற்கு முக்கியமான தேர்தல் என்பதால் கழக நிர்வாகிகள் இன்றிலிருந்து தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும். குறிப்பாக கழக மூத்த நிர்வாகிகளோடு இளைஞரணியினர் இணைந்து தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு சிலர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்ட மனு கொடுத்தால் ஒரு சில கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் முரண்பாடு காட்டுவதாக கூறினார்கள். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு தமிழகத்தில் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.
Next Story

