நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம். இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நீட் தேர்வு எழுதுவது அவசியம். இந்த சட்டத்தை அமுல்படுத்திய நாள் முதல் நீட் தேர்வு வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என கூறி ஆட்சி பொறுப்புக்கு வந்து 4-ஆண்டுகளாகியும் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என கூறி இதுவரை அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமலும் ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக மாணவரணி சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலை வகித்து எழுச்சி உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, நீட் தேர்வு விவகாரத்தில் பொய் உரைத்த திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் நீட் தேர்வு தோல்வியால் பாதிக்கப்பட்ட மாணாக்கர்கள் 22 பேர் ஆன்மா சாந்தி அடைவதற்காக அவர்களது திருஉருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தியை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மறைந்த மாணாக்கர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார்.
Next Story