காவல் ஆய்வாளரை பாராட்டிய காவல் ஆணையர்

காவல் ஆய்வாளரை பாராட்டிய காவல் ஆணையர்
X
இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஆய்வாளரை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
அகிலஇந்திய அளவிலான அனைத்து மாநில காவல்துறையினருக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் கேரளா மாநிலம் கொச்சினில் கடந்த 11.04.25 முதல் 15.04.25 வரை நடைபெற்றது. மொத்தம் 47 அணிகள் பங்கு பெற்ற நிலையில் தமிழ்நாடு காவல்துறை அணி சார்பாக மதுரை மாநகர், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமா மாலா அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் தனி நபர் பிரிவில் தங்க பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். வெற்றி பெற்ற காவல் ஆய்வாளர் அவர்களை, மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன்,அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Next Story