அத்துமீரும் சுற்றுலா பயணிகள்

அத்துமீரும் சுற்றுலா பயணிகள்
X
கண்காணிக்க வனத்துறைக்கு கோரிக்கை
கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி வரக்கூடிய சாலையில் அமைந்துள்ள முந்தங்கா வனவிலங்கு சரணாலய சாலையோர வனப்பகுதியில் மாலை நேரத்தில் உலா வந்த காட்டு யானையை அருகே சென்று வீடியோ எடுத்த இளைஞரை காட்டு யானை துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது... நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம்,கேரளா மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களும் ஒன்றினைந்து அமைந்துள்ளது.இங்கு புலி, காட்டு யானைகள், சிறுத்தை, காட்டு மாடு,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் அறியவகை பறவையினங்களும் வாழக்கூடிய ஒரு முக்கியமான உயிர்சூழல் மண்டலமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் நாள்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்குள்ள வனவிலங்குகளை காண்பதற்க்காக வருகை புரியக்கூடிய நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி வரக்கூடிய சாலையில் அமைந்துள்ள முந்தங்கா வனவிலங்கு சரணாலய சாலையோர வனப்பகுதியில் காட்டு யானை கூட்டம் உலா வந்துள்ளது.அப்போது கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வனப்பகுதிக்குள் சென்று காட்டு யானையை படம் பிடிக்க முயன்றுள்ளார்.அப்போது காட்டு யானை ஆக்ரோஷமடைந்து அந்த இளைஞரை துரத்தி உள்ளது.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story