நீலகிரி மாவட்டம் குன்னூரில் கேரளா மக்களின் சார்பாக முத்து பல்லக்கு விழா கோலகாலமாக கொண்டாப்பட்டது........

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கேரளா மக்களின் சார்பாக முத்து பல்லக்கு விழா கோலகாலமாக கொண்டாப்பட்டது........
X
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கேரளா மக்களின் சார்பாக முத்து பல்லக்கு விழா கோலகாலமாக கொண்டாப்பட்டது........ தமிழகத்திலேயே 34 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழா குன்னூரில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது இதனிடையே இன்று கேரள சமாஜம் சார்பில் 80-ம் ஆண்டு முத்து பல்லக்கு விழா நடந்தது. செண்டை மேளம் முழங்க ஆடல், பாடலுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடவுள் உருவம் கொண்ட உருவ பொம்மைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது அதில் டிஜிட்டல் சத்தத்துடன் நரகாசுரனை வதம் செய்வது, ஆக்ரோஷத்தில் அம்மனின்நடன நிகழ்ச்சி நடந்தது மேலும் சிவபெருமான் மண்டை ஓடுகளுக்கு இடையே நடனம் பாடியது போல் சித்தரிக்கப்பட்ட வாகனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது மட்டுமல்லாமல் நகர மத்திய பகுதியில் யானை கோபத்தில் பிளிர்வது போல் அதிக ஒளியுடன் சத்தம் வரும் வகையில் வைக்கப்பட்டுள்ளதை உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். இதனை தொடர்ந்து மவுண்ட் ரோடு பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் இரவை பகலாக்கும் வகையில் கண்களை கவரும் வான வேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Next Story