அரியலூர் அருகே பைக் மீது பன்றி மோதியதில் காசாளர் காயம்

X
அரியலூர்,ஏப்.20 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(54). இவர் முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வழக்கம் போல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சத்திரம் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்த போது சாலையின் குறுக்கே திடிரென சுமார் 4 காட்டு பன்றிகள் ஓடி வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி ஓடி சென்று விட்டது.பன்றிகள் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கண்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு வெத்தியார்வெட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மேலும் இந்த பகுதியில் ஏராளமான காட்டு பன்றிகள் விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

