டேலண்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்ஸ் பள்ளி மாணவர்கள் உலக சாதனை

X
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் பள்ளியைச் சேர்ந்த 5 வயது முதல் 13 வயதுடைய 7 சிறுவர் மற்றும் சிறுமிகள் ஒரே இடத்தில் கணிதம் அறிவியலாளர்களின் பெயர்கள், இரசாயனக் கலவை பெயர்கள், மருத்துவத் துறையின் பெயர்கள், தேசிய பறவைகள் மற்றும் பூங்காக்களின் பெயர்கள் கூறுதல், அப்துல் கலாம் உருவத்தில் கர்சீவ் கையெழுத்து எழுதுதல் என நோபல் உலக சாதனை படைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஏரி பாதுகாவலர் நாடியம் நிமல் இராகவன், அதிராம்பட்டினம் பிரில்லியன்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் வி.சுப்ரமணியன், நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சிஇஓ டாக்டர் எல்.அரவிந்த் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, சி.எஸ்.விஜய் ஆனந்த் - வி.விஜி ஆகியோரின் மகள் வி. சேஷ்மிதா நூறு மருத்துவ துறைகளின் பெயர்களை 1நிமிடம் 58 நிமிடத்தில் விரைவாகக் கூறி உலக சாதனை படைத்தார். எம்.பாலச்சந்திரன் - எம்.மீனாட்சி ஆகியோரின் மகள் எம் பி. சம்ரித்த ஸ்ரீஜா 250 இரசாயனக் கலவைகளின் பெயர்களை 2 நிமிடம் 33 வினாடிகளில் விரைவாக கூறி உலக சாதனை படைத்தார். என்.பழனிவேல் ராஜா - பி. பிரியதர்ஷினி ஆகியோரின் மகன் பி.அக்சரன் 100 கணித அறிவியலாளர்களின் பெயர்களை 2 நிமிடத்தில் விரைவாக கூறி உலக சாதனை படைத்தார். எம். செந்தில் குமார் - எஸ். நதியா ஆகியோரின் மகள் எஸ். பிரதிஷ்டா 160 வெவ்வேறு படிப்பு துறைகளின் பெயர்களை 1நிமிடம் 46 வினாடிகளில் விரைவாக கூறி உலக சாதனை படைத்தார். பி. சுப்புரத்தினம் - எஸ். வனிதா ஆகியோரின் மகன் எஸ்.தர்ஷிக் 150 நாடுகளின் தேசியப் பறவைகளின் பெயர்களை 2 நிமிடம் 30 வினாடிகளில் விரைவாக கூறி உலக சாதனை படைத்தார். எம். தமிழ்செல்வன் - பி.சித்ரா ஆகியோரின் மகள் டி. திபாஷா 106 தேசியப் பூங்காக்களின் பெயர்களை 1நிமிடம் 41 வினாடிகளில் விரைவாக கூறி உலக சாதனை படைத்தார். சி.எஸ்.விஜய் ஆனந்த் - வி. விஜி ஆகியோரின் மகன் எஸ்.வி ஹரிஹரன் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் ஓவியத்தில் கர்சீவ் கையெழுத்தை 10 நிமிடம்29 வினாடிகளில் விரைவாக எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இவர்களது சாதனையை நோபல் நிறுவனத்தில் இருந்து வந்த சி.இ.ஓ டாக்டர். எல். அரவிந்த் ஆய்வு செய்து பதிவு செய்தார். பிறகு முடிவில் சிறுவர், சிறுமியர்களும் நோபல் உலக சாதனை படைத்ததாக அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நோபல் உலக சாதனை படைத்த மாணவர்கள் அனைவரும் தண்ணீரில் நின்று நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்த்தும் வகையில் உறுதிமொழி எடுத்தனர். மேலும் 7 மாணவ மாணவிகளும் தங்களுடைய உண்டியல் பணத்திலிருந்து ஒரு பகுதியை நிமல் இராகவனிடம் ஏரி அருகில் நூலகம் அமைப்பதற்காக அளித்தனர். நிறைவாக, டேலண்ட் ஸ்கூல் தாளாளர் க. வெங்கடேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story

