பேராவூரணி நகர வர்த்தக கழக நிர்வாகிகள் தேர்தல் தலைவராக ஆர்.சுப்பிரமணியன் தேர்வு 

பேராவூரணி நகர வர்த்தக கழக நிர்வாகிகள் தேர்தல் தலைவராக ஆர்.சுப்பிரமணியன் தேர்வு 
X
வர்த்தகர் சங்கம்
பேராவூரணி நகர வர்த்தகர் கழக புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பொறுப்பிற்கு ஆர்.சுப்ரமணியன் டி.சாமியப்பன் இருவரும் போட்டியிட்டனர். அதேபோல், பொருளாளர் பதவிக்கு ரா.பாரதிதாசன், ஜெ.மணிகண்டன் இருவரும் போட்டியிட்டனர். செயலாளர் பொறுப்புக்கு பி.எஸ்.அப்துல் ரஹ்மான் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை 9 மணிக்கு நகர வர்த்தகர் கழக கட்டிடத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  இதில் வர்த்தகர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 530 வாக்குகள் பதிவான நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுப்பிரமணியன் 339 வாக்குகளும், சாமியப்பன் 181 வாக்குகளும் பெற்றனர். செல்லாத வாக்குகள் 10 ஆகும். 158 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்பிரமணியன் வெற்றி பெற்றார்.  அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ.மணிகண்டன் 319 வாக்குகளும், ரா.பாரதிதாசன் 195 வாக்குகளும் பெற்றார். செல்லாத வாக்குகள் 16 ஆகும். 124 வாக்குகள் வித்தியாசத்தில் மணிகண்டன் வெற்றி பெற்றார்.  வெற்றி பெற்றவர்களுக்கு, எம்எல்ஏ நா.அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ மா.கோவிந்தராசு, கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கந்தப்பன், பாரதி வை.நடராஜன், எஸ்.டி.டி.சிதம்பரம், மா.கணபதி, குக.லெட்சுமணன் வாழ்த்து தெரிவித்தனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என வர்த்தக கழக கட்டுப்பாட்டு கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story