புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

மதுரையில் புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில், மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை இன்று (ஏப்.19) மாலை வணிகவரித் துறை அமைச்சர் பி மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் அவர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இணைந்து கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநகராட்சி மேயர், மதுரை கோட்ட மேலாண் இயக்குனர்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story