மானமுள்ள அரசு ஊழியர்கள் இனி திமுகவிற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என மாபா பாண்டியராஜன் பேட்டி

மானமுள்ள அரசு ஊழியர்கள் இனி திமுகவிற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என மாபா பாண்டியராஜன் பேட்டி
X
மானமுள்ள அரசு ஊழியர்கள் இனி திமுகவிற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என மாபா பாண்டியராஜன் பேட்டி
மனிதர் கூட இல்லை மிருகம் போல பொன்முடி பேசி இருக்கிறார் மிருகங்கள் இருக்கும் வனத்துறை அவருக்கு சரியான துறை தான், கல்வி அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு போஸ்டர் ஓட்டுவதே வேலையாக இருக்கிறது, மானமுள்ள அரசு ஊழியர்கள் யாரும் திமுக அரசுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள், அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 15 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அருப்புக்கோட்டையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் நீட் தேர்வாழ் உயிரிழந்த 22 மாணவ மாணவியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கோட்டை சுப்பிரமணியன், ராஜவர்மன், மணிமேகலை, அதிமுக நகர செயலாளர் சோலை சேதுபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுக்கு இரண்டு நிமிடம் மெளன செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே என குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீதிமன்றமே இரண்டு நாட்களில் வழக்கு தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.‌ தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.‌ மக்களின் கொந்தளிப்பு அனைத்தும் திமுக மீது தான் உள்ளது. மனிதர் கூட அல்ல மிருகம் போல அமைச்சர் பொன்முடி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும் அசிங்கபடுத்துவது போல் பலமுறை பேசியிருக்கிறார். அவருக்கு வனத்துறை சரியான குறை தான் மிருகங்கள் இருக்கக்கூடிய துறை தான். அவர் எந்த அமைச்சராகவும் இருக்கக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தும் என பேசினார். பள்ளி மாணவர் ஒருவர் அரிவாளால் தாக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, டிபன் பாக்ஸில் அரிவாளை வைத்து பள்ளிக்கு வருவது எவ்வளவு கேவலமான விஷயம். திமுக ஆட்சியில் தலித் மக்கள் மீதான தீமைகள் வேங்கைவயலில் இருந்து நாங்குநேரி வரை தொடர்கிறது. ஜாதிக்கு ஒரு கயிறை கையில் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள் ஆசிரியர்கள் ஜாதிப் பெயரைச் சொல்லி டான்ஸ் ஆடுகிறார்கள். என்ன நடவடிக்கை எடுத்தார்கள் கல்வி அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு போஸ்டர் ஒட்டுவதே வேலையாக இருக்கிறது என சாடினார். அரசு ஊழியர்களும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என கூறினார்கள் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மானமுள்ள அரசு ஊழியர்கள் யாரும் இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் இதன் தாக்கம் இன்னும் 11 மாதங்களில் தெரியும் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக டெபாசிட் இழக்கும் என பேசினார். அதிமுக ஆட்சி அமைந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எந்த நடவடிக்கை எடுக்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்ன செய்தால் மாணவர்கள் இது போன்று செய்ய மாட்டார்கள் என்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது அதிமுக தான். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதற்கு அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பேசினார்.
Next Story