திமுக இளைஞரணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

X
விருதுநகர் தனியார் மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக இளைஞர்களின் நிர்வாகிகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி திருச்சி சிவா, நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் சமூக வலைதளத்தில் பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் கட்சி நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்டது. பயிற்சி முகாம் ஆக்கப்பூர்வமாகவும் தேர்தல் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதை மையப்படுத்தி இக்கூட்டம் நடைபெற்றது. தாமரை இரட்டை இலை மீது மலர்ந்தே தீரும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு? கனவு சிலருக்கு இரவில் வரும். சிலருக்கு பகலில் வரும். கனவில் எது வர வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. ஒரு அரசியல் கட்சி நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்று சொல்வதும், நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வதும் இயற்கை. எது நடக்கப் போகிறது என்பதை தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தமிழ்நாட்டிற்கு செய்திருக்கக் கூடிய தொண்டு, ஆட்சியில் இருந்து நிறைவேற்றியிருக்கக் கூடிய திட்டங்கள், எல்லாப்பகுதிகளிலும் அமைச்சர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் பணியாற்றியிருப்பது. மேலும், ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற பாதகமான சட்டங்கள், சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கலாம் மாநில நலனுக்கு எதிரானதாக இருக்கலாம். அதையெல்லாம் திமுகவின் சார்பில் குரல் கொடுத்து , இன்றைக்கு இந்தியா முழுவதும் தமிழ்நாட்டை திமுகவைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். எங்களுடைய பணியும், நாங்கள் ஆற்றியிருக்கக் கூடிய தொண்டும். நிச்சயமாக மக்களை, கழகத்தின் பக்கம் நிற்கத்தான் செய்யும். நேற்று முதலமைச்சர் சொன்னது போல், எத்தனைப் படைகள், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரோ? என்ற கேள்விக்கு சொல்பவர்கள், என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். மக்களுக்குத் தெரியும், எங்கள் கூட்டணி ஆரம்ப காலத்திலிருந்து சரியான குறிக்கோள்களோடு, தெளிவான பார்வையோடு இந்த நாட்டினுடைய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும. மாநில நலன், மாநிலங்களுடைய ஆட்சி, அதிகாரத்துடன் கூட்டாட்சி தன்மையை பாதுகாக்க வேண்டும். ஒற்றைத்தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பன்முகத்தன்மை கொண்டு நாடு. இந்த கொள்கையுள்ளவர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். வேறு பெயர்களில் அழைத்தால் சரியான புரிதல் இல்லையென்று அர்த்தம் என தெரிவித்தார்.
Next Story

