துரை வைகோ ராஜினாமா எதிரொலி ராஜபாளையம் அருகே மதிமுக வினர் கண்டன போராட்டம்!

X
துரை வைகோ ராஜினாமா எதிரொலி ராஜபாளையம் அருகே மதிமுக வினர் கண்டன போராட்டம்! ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் சற்றுமுன் மதிமுக முதன்மைச் செயலாளர் துறை வைகோ திடீரென தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதனை வாபஸ் பெற கோரியும் ராஜினாமா செய்ததை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் சற்று முன் மதிமுக முதன்மை கழகச் செயலாளர் துரைவைகோ பதவினை ராஜினாமா செய்தார். மேலும் துரை வைகோவை மனதளவில் காயப்படுத்தியும் கட்சிக்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கும் மல்லை சத்யாவை கண்டித்தும் அவரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் துரை வைகோ ராஜினாமா செய்ததை வாபஸ் வாங்க கோரி விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் மதிமுகவினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் செட்டியார் பட்டி மற்றும் சேத்தூர் பேரூர் கழக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு துரை வைகோ ராஜினாமா செய்ததை வாபஸ் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

