திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் இல்லம் தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

X
திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றுதான் மாணவர்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய ஓர் அரசியல் இயக்கம் என திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற இல்லம் தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு பேச்சு தமிழ்நாட்டில் 60 வருடங்களுக்கும் பிறகும் இந்தி வர முடியவில்லை - இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை - தமிழ் இருக்கக்கூடிய இடத்தில் இந்தியை திணிப்பது தான் நாங்கள் எதிர்க்கிறோம் என நிதியமைச்சர் மாணவர்கள் மத்தியில் பேச்சு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.தோப்பூரில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் இல்லம் தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளும் நிகழ்ச்சி தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் தலைமையில் ஏராளமான மாணவ மாணவியர்கள் திமுக மாணவர் அணியில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவரணி அமைப்பாளர்கள் கருப்புராஜா, பாலமுருகன் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது. தமிழ்நாட்டில் உங்களுக்கு தெரிந்த எத்தனையோ கட்சிகள் இருக்கு அரசியல் வாய்ப்புகள் பெற்று இருக்கக்கூடிய பல இயக்கங்கள் தோன்றி வந்திருக்கிறது. நான் மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது எல்லாம் இந்த பருவத்தில் நீங்கள் உங்களது கல்வியை இந்த அளவுக்கு ஊன்றி படிக்கிறீர்களோ அதேபோல நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காலம் மாற்றம் எப்படி வந்திருக்கிறது என்றால் இன்றைக்கு நாம் படிக்க வேண்டும் படித்தால் தான் நமக்கு முன்னேற்றம் வரும் எப்படி நமக்கு வரும் நம்முடைய கல்விதான் நமக்கு முன்னேற்றம் தமிழ்நாடு இன்றைக்கு கல்வியில் மிகப்பெரிய இடத்திலிருந்து சேரி அந்த கல்வி வரவேண்டும் படிக்க வேண்டும் நமக்கு ஒரு வளமான எதிர்காலம் வேண்டும் நாம் நல்ல எதிர்காலத்தில் வரலாம் ஆனால் அந்த கல்வியின் மூலமாகவோ நீங்கள் பெறக்கூடிய வேலை வாய்ப்புகள் மூலமாகவும் இந்த சமுதாயத்திற்கு இந்த மாணவர் என்ன செய்கிறீர்கள் சமுதாயத்திற்கு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி வருகிற போது மாணவர்கள் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் மெயின் ஸ்ட்ரீம் பாலிடிக்ஸ் என்று சொல்லக்கூடிய வகையில் இன்றைக்கு நாட்டிலே இருக்கக்கூடிய அரசியல் இயக்கங்களிலே தங்களை ஒப்படைத்துக் கொண்டு இந்த நாட்டினுடைய நல்லதுகளுக்கும் அவர்கள் பங்குபெற்று அவற்றை செலுத்த வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியமானது. குறிப்பாக இன்றைக்கு தமிழ்நாட்டில் இத்தனை வருடத்திற்கு பிறகு 60 வருஷத்திற்கு பிறகும் இந்தி இங்கே வர முடியவில்லை இந்தி திணிப்பை நாம் எதிர்க்கிறோம், இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தியை தமிழ் இருக்கக்கூடிய இடத்தை விட்டு நீங்கள் இந்தியை கொண்டுவர வேண்டும் என்ற ஒரு முயற்சி ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எடுத்து விட்டு இந்தியை வைக்க வேண்டும் என்றால் நம்முடைய மாணவர்களுக்கு இன்று வேறு இடத்தில் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆங்கிலம் இருக்கக்கூடிய வகையில் தான் நீங்கள் உலகளாவிய அளவில் படிக்க முடியும் அந்த இடத்திற்கு ஒரு வேற்றுமொழியை கொண்டு நீங்கள் வைப்பீர்கள் என்று சொன்னால் உங்களுடைய கல்வி வாய்ப்புகள் மட்டுமல்ல உங்களுடைய வேலை வாய்ப்புகளும் பறிபோகும். இவற்றைக் எல்லாம் கொள்கை இருக்கக்கூடிய இந்த சமுதாயத்தில் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் ஒரு அரசியல் விழிப்புணர்வோடு உங்கள் பங்களிப்பை நீங்கள் செலுத்த வேண்டும் என்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் நான் திடமாக உங்களிடத்தில் சொல்வேன் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் மாணவர்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கம் அந்த அரசியல் இயக்கத்தில் நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் அந்த உணர்வைப் பெற்றவனாக நீங்கள் இங்கே வந்து விரும்பி நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணிகள் எங்கள் இணைத்துக் கொள்கிறோம் என்று நீங்கள் வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவரையும் குறிப்பாக இத்தனை மாணவிகள் வந்திருக்கிறீர்கள் மாணவச் செல்வங்கள் வந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரையும் நான் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாழையடி வாழையாக வரக்கூடிய நீங்கள் தான் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்ற, தமிழ்நாட்டின் பெருமைகளை காப்பாற்ற, இந்த மண் உங்களுக்கு என்ன சொல்லி இருக்கிறதோ அந்த மண்ணுக்கு நீங்கள் திருப்பி தருவதற்கு ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து உங்களுக்கு தேவை என்றால் அது திராவிட முன்னேற்றம் கழகம் தான் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
Next Story

