திமுக ஆட்சியை குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவாஞ்சியம்,அச்சுதமங்கலம், ஆனை குப்பம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில் .. தற்போதைய ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ரோட்டில் இறங்கி போராடுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விரைவில் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகி விட்டனர். எனவே திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் சென்று அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இளவரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால், நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல இணைச் செயலாளர் செல் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story



