நீட் தேர்வு பயந்து இறந்த மாணவகள்- மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

நீட் தேர்வு பயந்து இறந்த மாணவகள்- மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
X
நீட் தேர்வு பயந்து இறந்த மாணவகள்- மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
நீட் தேர்வில் உயிர்நீத்த மாணவ,மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடந்த இந்நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாணவர் அணி மாவட்ட செயலாளர் ராகுல் தலைமை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, 'நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என பொய் கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதனை நிறைவேற்ற வில்லை' என்றார். இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story