ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர கோரிக்கை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர கோரிக்கை
X
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர கோரிக்கை பல்லடத்தில் கோரிக்கை
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர கோரிக்கை பல்லடத்தில் இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் நல்லதம்பி கூறியதாவது:- வலி நிவாரணத்திற்காக கொடுக்கப் படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை மது மற்றும் குளிர்பானத்துடன் கலந்து போதைக்காக பலர் பயன்படுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து பயன்படுத்தினால் இருதயம், மூளை, சிறுநீரகம், உள்ளிட்டவை செயலிழந்து விடும். ஆன்லைனில் இது போன்ற மருந்து, மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்றது. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு அடிப்படையில் தான் இது போன்ற மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். மருத்துவர்கள், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மருந்து விற்பனையாளர் சங்கம் சார்பிலும் இதுபோன்ற மருந்து-மாத்திரைகளை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story