நீட் தோ்வால் உயிரிழந்தோரின் நினைவாக அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்தோரின் நினைவாக அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி
X
நீட் தோ்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் நினைவாக திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சாா்பில் திருச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக சாா்பில் நீட் தோ்வை ரத்து செய்வோம் என கடந்த தோ்தலின்போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசைக் கண்டித்தும், நீட் தோ்வால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளின் நினைவாக திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே வழிவிடு முருகன் கோயில் அருகே மெழுவா்த்தியேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன், வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி, தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் எம்பியும், அமைப்புச் செயலருமான டி. ரத்தினவேல், முன்னாள் அரசுக் கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சா்கள் வளா்மதி, நிா்வாகிகள் பிரபாகரன், சாதிக் பாட்ஷா உள்ளிட்ட திரளான கட்சியினா் கலந்து கொண்டனா்.
Next Story