திருச்சி அதிமுக புறநகர் சார்பில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரம்

திருச்சி அதிமுக புறநகர் சார்பில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரம்
X
அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் அவலங்களை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது
திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணிகண்டம் தெற்கு ஒன்றியம், ஆலம்பட்டி ரோடு சுற்று வட்டார பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் அவலங்களை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி பொதுமக்களிடம் வழங்கினார். இதில் கழக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினருமான தாடி மா.ராசு, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா, துணைச் செயலாளர் எரங்குடி மாணிக்கம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story