திருப்பத்தூரில் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அதிமுகவினர் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி.

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அதிமுகவினர் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாக கூறி திமுக அரசை கண்டித்தும் 22 மாணவ மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்தஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை, வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story

