மேல்மலையனூர் டெண்டர் விவகாரம் நீதிமன்றம் போட்ட உத்தரவு

மேல்மலையனூர் டெண்டர் விவகாரம் நீதிமன்றம் போட்ட உத்தரவு
X
டெண்டர் விவாதத்தில் தடை விதித்து உத்தரவு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 10 பணிகளுக்கான டெண்டர், கடந்த 15ம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்த டெண்டர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்ததால், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் சத்யராஜ் மற்றும் தனசேகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று அவசர வழக்காக நீதிபதி சத்தியநாராயணபிரசாத் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி, டெண்டருக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கை 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story