கோவை: நீட் தேர்வு உயிரிழப்பு - எஸ்.பி வேலுமணி அஞ்சலி !

கோவை: நீட் தேர்வு உயிரிழப்பு - எஸ்.பி வேலுமணி அஞ்சலி !
X
கோவையில் அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றியதால் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்த போது தான். அப்போது காந்திராஜன் கல்வி அமைச்சராக இருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அம்மா. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டார். திமுக அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை வைத்து மத்திய அரசு மீது பழிபோட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் எடப்பாடியார் ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. தற்போது இருப்பது தேர்தலுக்கான கூட்டணி என கூறினார்.
Next Story