கோவை: அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறை திறப்பு !

கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட காத்திருப்பு அறையை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று திறந்து வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட காத்திருப்பு அறையை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். ஒரு வருடத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்தபோது, பிரசவ வார்டுக்கு வெளியே நோயாளிகளின் உறவினர்கள் வசதியின்றி காத்திருப்பதை பார்த்ததாகவும், அதன் விளைவாக இந்த காத்திருப்பு அறை கட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறையில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளன. ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இதைச் செய்து கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.
Next Story