ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ ஈஸ்டர் வாழ்த்து

ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ ஈஸ்டர் வாழ்த்து
X
கிள்ளியூர்
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும்,  கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள ஈஸ்டர் பெருவிழா வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-           கிறிஸ்து இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் சமூகத்திற்கு நிறைய பாடங்களை கற்றுத் தருகிறது. சகிப்புத்தன்மையும்  தியாகமும் என்றும் வெற்றியை ஈட்டி தரும். மேலும் சத்தியத்தை எவ்வளவு குழி தோண்டி புதைத்தாலும் அது என்றுமே உயிர் பெற்று நிலைத்திருக்கும். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றி அவர் சமூகத்திற்காக வாழ்ந்ததை மாதிரியாக எடுத்துக்கொண்டு நாம் வாழும் போது நமக்கும் நமது      சமூகத்திற்கும்          நன்மைகள்  வந்து சேரும்.                 இந்த ஆண்டின் ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் 20 - ம் தேதி (இன்று) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திடும் கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் இயேசு பிரானின் உயிர்த்தெழுதல் பண்டிகையை கொண்டாடுகிற இந்த நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பும் மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் இயேசு பிரான் போதித்த, அன்பு, இரக்கம், பணிவு, தியாக உணர்வு, அமைதி, சகோதரத்துவத்தை மக்கள் பின்பற்றி அமைதி,  சமாதானத்தோடும்,  மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் ஏற்போம்.  இந்நாளில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பூத்து குலுங்கட்டும். சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை என்றும் நிலைத்திருக்கட்டும். அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும்  ஈஸ்டர் பெருவிழா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Next Story