குலசேகரம் : மின்கம்பத்தில் மோதிய டெம்போ

X
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து அரிசி மாவு ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ நேற்று மாலை பனச்சமூடு பகுதிக்கு சென்றது. அதிவேகமாக வந்த அந்த டெம்போ குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் அரசு நடுநிலைப் பள்ளி பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் மறுபக்கம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற வாகன பைனான்ஸ் ஏஜண்டான பிரசாத் (45) மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதியது. அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து உயிர் தப்பினார். தொடர்ந்து அந்த டெம்போ அப்பகுதியில் நின்ற மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது. குலசேகரம் போலீசார் மற்றும் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் மின் கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது.
Next Story

