ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்!

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்!
X
செம்பட்டியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்!
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பாண்டியன் நகரில் முக்கிய தெருக்களின் சந்திப்பில் உள்ள நுழைவாயிலில் உள்ள மின் கம்பங்கள் பழுதடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதில் மின்சாரம் தொடா்பாக சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டியிருந்தால், மின்வாரியப் பணியாளா்கள் மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய முடியாத நிலை உள்ளது. இதேபோல, மழைக் காலங்களில் அல்லது பலத்த காற்று வீசும் சமயங்களில் இந்த மின் கம்பம் அருகே செல்வதற்கு அச்சப்பட வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பம் அமைத்த தர வேண்டும் என பாண்டியன் நகா் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா். இது குறித்து மின் வாரியப் பொறியாளா் காா்த்திக் கூறுகையில், வருகிற திங்கள்கிழமைக்குள் அந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினாா்.
Next Story